பெண்ணிடம் அத்து மீறிய ஆசாமிக்கு வலை
காரைக்கால் : தனிமையாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால் விழிதியூர் மடவிலாகத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் குமார் இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஏஞ்சல் இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த ஏஞ்சலிடம் அதே பகுதியை சேர்ந்த ஹரிதாஸ், 46; தவறாக நடக்க முயற்சித்தார். ஏஞ்சல் அவரிடமிருந்து தப்பி வெளியே ஓடி வந் தார். உடன் ஹரிதாஸ் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி சென்றுள்ளார். ஏஞ்சல் புகாரின் பேரில் நிரவி போலீசார் ஹரிதாஸ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.