உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வு பெற்ற ஊழியரை வெட்டியவருக்கு வலை

ஓய்வு பெற்ற ஊழியரை வெட்டியவருக்கு வலை

புதுச்சேரி: ஓய்வு பெற்ற ஊழியரை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, என்.எல்.சி., நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கும் இவரது சகோதரருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இவரது தம்பி மகன் மணிகண்டன் கடந்த 9ம் தேதி வீட்டு அருகில் பட்டாசு வெடித்தார். மெயின் ரோட்டில் பட்டாசை வெடிக்குமாறு சுந்தரமூர்த்தி கூறினார். ஆத்திரமடைந்த மணிகண்டன், கத்தியால், சுந்தரமூர்த்தியை வெட்டினார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, சுந்தரமூர்த்தி புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !