உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணை தாக்கிய இருவருக்கு வலை

பெண்ணை தாக்கிய இருவருக்கு வலை

புதுச்சேரி: போதையில் தகராறு செய்தவர்களை தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி மொட்ட தோப்பு, ஆர்.வி., நகரை சேர்ந்த, ரவிகாந்த ஜான் மேரி, முதலியார்பேட்டையை சேர்ந்த பரத் இருவரும் மது போதையில், நேற்று முன்தினம், ஆர்.வி., நகரில் நின்று கொண்டு அவதுாறாக பேசி கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த, சேர்ந்த மணிகண்டன், மனைவி ராணி, 32; அவர்களை தட்டி கேட்டார். அதில், ஆத்திரமடைந்த, இருவரும் சேர்ந்து, ராணியை, சுத்தியால் தலையில் தாக்கினர். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து, ரவிகாந்த ஜான் மேரி உட்பட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை