உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பளுதுாக்கும் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

பளுதுாக்கும் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி : புதுச்சேரி பளுத்துாக்கும் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி பளுத்துாக்கும் சங்கத்தின் 2025--29 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் செண்பகா ஹோட்டலில் நடந்தது. இந்திய பளு துாக்கும் சம்மேளனம், தேர்தல் குழு கமிட்டி அமைத்து தேர்தலை நடத்தியது. தேர்தல் அதிகாரியாக, வழக்கறிஞர் அருள் கோஸ் செயல்பட்டார். தேர்தல் முடிவில், புதிய தலைவராக உதயகுமார், துணை தலைவர்களாக ருத்ரமூர்த்தி, கீர்த்தி, பொதுச் செயலாளராக கணபதி, இணைச் செயலாளர்களாக பிரகதீஸ்வரி, சித்ராநந்தம், பொருளாளராக அய்யனார், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். இதில், தேர்தல் கமிட்டியின் உறுப்பினர்கள் சுப்பிரமணிய கொம்பாசி, ஆனந்த கவுடா, ரஜினேஷ் பாஸ்கர், சதீஷ் சிவலிங்கம், ஸ்டாலின், இந்திய பளுத்துாக்கும் சம்மேளன சியாமளா சிட்டி, புதுச்சேரி ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி