உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடு கலெக்டர் தலைமையில் ஆலோசனை

 புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடு கலெக்டர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி: புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ், உள்ளாட்சி, தீயணைப்பு, மின்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும், வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறும் தினத்தன்று பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் போக்குவரத்தை சரி செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். மக்கள் கூடும் கடற்கரைச்சாலை, பாண்டி மெரினா பீச், ஈடன் கார்டன் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுருத்தினார். ஒயிட் டவுன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி, மொபைல் டாய்லெட் வசதி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுருத்தினார். விழா நடைபெறும் முக்கிய இடங்களில் தடையில்லா மின்சாரம் அளிக்கவும், தேவையான இடங்களில் ஜென்செட் வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !