ஒருங்கிணைந்த நிலை தேர்வு காலக்கெடு நீட்டிப்பு இல்லை
புதுச்சேரி: அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த நிலைத் தேர்வுக்கு வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து தேர்வு ஆணையம் சார்பு செயலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி தேர்வாணையம், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்காக, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி நிலைத்தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலைப் பள்ளி நிலைத்தேர்வு ஆகியவற்றுக்கான அறிவிப்பை கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கடந்த 18ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 14ம் தேதியாகும். எனவே, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நெருங்குவதால், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14ம் தேதி மாலை 3:00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. காலக்கெடு நீட்டிக்கப் பட மாட்டாது. ஏதேனும், விளக்கம், உதவி தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை 0413- 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட் டுள்ளது.