இரவு நேர டாக்டர்கள் இல்லை
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது;அரியாங்குப்பம் மருத்துவமனையில் கூடுதல் மற்றும் இரவு நேர டாக்டர்கள் இல்லை. கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். இ.சி.ஜி., மெஷின் டெக்னிஷியன், கட்டு கட்டும் அட்டண்டர்களை அவுட் சோர்சிங் மூலம் பணியமர்த்த வேண்டும். சுற்றுலா மேம்படுத்த அரியாங்குப்பம் ஆற்றை துார்வாரி படகு போக்குவரத்து, மாங்குரோவ் சதுப்பு வளர்ப்பு துவங்க வேண்டும். தேங்காய்த்திட்டை மையமாக வைத்து ஆற்றை துார்வாரி மேம்படுத்த வேண்டும்.அத்தியாவசியமான குடிநீர் பிரச்னையை சரிசெய்து தர வேண்டும். முதியோர் உதவித்தொகை பெறுவோர் மட்டுமே ஈமசடங்கு நிதி வழங்கப்படுகிறது. அனைத்து ஏழை குடும்பத்திலும் யார் இறந்தாலும் ஈமசடங்கு நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறினார்.