மேலும் செய்திகள்
ஓவர் குடி மெக்கானிக் சாவு
02-Sep-2025
புதுச்சேரி : மேற்கு வங்காளம், புஸ்தாம்பூரை சேர்ந்தவர் ஜெலாலுதீன், 41; கட்டட தொழிலாளி. ஜெலாலுதீன், கடந்த 8 மாதங்களாக வில்லியனுார் அடுத்த கொம்பாக்கத்தில் சிமென்ட் ஷீட்டால் ஆன தற்காலிக வீட்டில் தங்கி, குருசுக்குப்பத்தை சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் பிரதீஷ்குமாரிடம் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி வேலை முடிந்து, அதிக குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெலாலுதீன், நேற்று முன்தினம் காலை சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். தகவலறிந்த பில்டிங் காண்ட்ராக்டர் பிரதீஷ்குமார், அவரை மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஜெலாலுதீனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Sep-2025