என்.ஆர்.காங்., துவக்க விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் மாநில செயலாளர் ஜெயபால் அழைப்பு
புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியின் 15ம் ஆண்டு துவங்க விழா வரும் 7ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இது குறித்து என்.ஆர்.காங்., மாநில செயலாளர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியின் தனித் தன்மையைகாத்திட தோற்றுவிக்கப்பட்ட அகில இந்திய என்.ஆர். காங்., பேரியக்கம், வரும் 7ம் தேதி தனது 15ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 15ம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் மக்களோடு, மக்களாக இணைந்துநம்மை மேன்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, கட்சியின் துவக்க நாளை மாநில முழுதும் அந்தந்த பகுதியில் விழாவிற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்திட வேண்டும்.மக்களை ஒன்று திரட்டி கொடி ஏற்றுதல், இனிப்புகள் மற்றும் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குதல் போன்ற நலத்திட்டஉதவிகளை வழங்கவேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக அர்பணிப்பு, தியாக உணர்வுடன் பணியாற்றிய இயக்கத் தொண்டர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல்வரின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்., என்.ஆர்.காங்., கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழா வரும் 7ம் தேதி காலை 9:30 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. அதில், கட்சி தலைவர், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதில், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.