உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியர் அலுவலர்கள் சங்க வாயிற்கூட்டம்

செவிலியர் அலுவலர்கள் சங்க வாயிற்கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செவிலியர் அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், செவிலிய அலுவலர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக தீர்க்க வலியுறுத்தி வாயிற் கூட்டம் ஏனாம் அரசு மருத்துவமனை எதிரில் நடந்தது. சங்கத் தலைவர் சுனிலா குமாரி, நிர்வாகி சரஸ்வதி, செயற்குழு உறுப்பினர் ஷேக் மெஹபுன்னிசா பேகம் மற்றும் செவிலிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காலியாக உள்ள செவிலியர் அலுவலர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். செவிலியர் படி நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !