உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

பாகூர்:குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை கோமளா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றி வேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் சங்கரதேவி, வனிதா, நான்சி, திவ்யா, செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினார். தனியார் மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் சரண்யா, சுதாகர், விரிவுரையாளர்கள் பூஜாபிரியா, சபரிநாதன் மற்றும் மருத்துவ மாணவர்கள் அப்துல்ஜலால் சதீஷ் ஆகியோர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !