மேலும் செய்திகள்
'ஊட்டச்சத்து' உட் கொண்டால் ஆரோக்கியம் வசப்படும்!
03-Sep-2024
நெட்டப்பாக்கம்: ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையம் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா கல்மண்டபம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.திட்ட அதிகாரி நிர்மலா தேவி தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அதிகாரி முகந்தி ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து பேசினார்.கர்ப்பிணிகளுக்கு வளையலணி விழா நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு, ஊட்டச்சத்து பெட்டகங்களை பாலுாட்டும் தாய்மார்களுக்கு வழங்கினார். ஊட்டச்சத்து குறித்து கண்காட்சி மற்றும் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.நெட்டப்பாக்கம் கொம்யூனுக்குட்பட்ட அனைத்து அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர்.
03-Sep-2024