உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிட்ஜெஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

பிரிட்ஜெஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

புதுச்சேரி: புதுச்சேரி பெரியார் நகரில் உள்ள பிரிட்ஜெஸ்லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு, சுகாதாரம், மற்றும் மனநலம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் ஆரோக்கியமான உணவு வகைகளை சமைத்து வந்து, காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில், மருத்துவர் வரலட்சுமி கோபிநாத், சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் கூறுகையில், 'முறையான உணவு முறை, சுகாதாரம் மற்றும் மனநலம் என்பது உடல், மனம் மற்றும் சமூக நல வாழ்வை மேம்படுத்துகிறது.கர்ப்ப காலத்திலிருந்தே முறையான உணவு, உணர்வுகளை கட்டுக்கோப்பில் வைத்திருத்தல் , குடும்பத்துடன் சந்தோஷமாகவும், ஆரோக்கியமான மன நலத்துடன் இருந்தாலே ஆட்டிசம், துருதுருத் தன்மை போன்ற குறைகளை நாம் வருங்காலத்தில் தவிர்க்கலாம். உணவு, சுகாதாரத்தை கடைபிடித்தால், தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். நம் வீட்டில் சமைக்கும் பாரம்பரியமான உணவு வகைகள், சமச்சீர் உணவு, போதுமான துாக்கம், உணவு செயலியை தம் மொபைலில் இருந்து தவிர்த்து விடுதல், உடற்பயிற்சி செய்தல், போதை வஸ்துகள் பழக்கங்களை தவிர்த்தல், இவற்றை பின்பற்றினால், நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என, தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை