உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாவாணர் நகருக்கு மின் மோட்டார் என்.ஆர்.காங்., பிரமுகர் வழங்கல்

பாவாணர் நகருக்கு மின் மோட்டார் என்.ஆர்.காங்., பிரமுகர் வழங்கல்

புதுச்சேரி: பாவாணார் நகருக்கு குடிநீர் மின் மோட்டாரை என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி தனது சொந்த செலவில் வழங்கினார்.உழவர்கரை தொகுதி பாவாணார் நகரில் பொது பயன்பாட்டிற்கான குடிநீர் மின் மோட்டார் பழுதடைந்ததால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டனர். அதனையொட்டி, மின்மோட்டாரை மாற்றித் தருமாறு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமியிடம் கோரினர். அதனையேற்று அவர் 1.5 எச்.பி., திறன் கொண்ட மின் மோட்டாரை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் மற்றும் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !