உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விரைவில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு: ஆயத்த பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

விரைவில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு: ஆயத்த பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கானஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில்இரு உயர்மட்ட கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சியை அறிவதற்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் பொருளாதார கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதார கணக்கெடுப்புகள் நாட்டின், மாநிலத்தின் பலத்தை புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.தேசிய அளவில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பினை நடத்த தயாராகி வரும் சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் இதற்கான ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளன.தலைமை செயலர் சரத் சவுகான் தலைமையில், மாநில அளவிலான உயர்மட்ட கமிட்டியும், புதுச்சேரி கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கமிட்டியும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, மாநில, மாவட்ட அளவில், முக்கிய பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.பொருளாதார கணக்கெடுப்பிற்கு மக்கள் தொகை அடிப்படையில் சில விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது. பல்வேறு பகுதிகள் புதிதாக உருவாகியுள்ளன. இப்பகுதிகளில் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது.அதனை ஒருங்கிணைத்து மேப்பிங் செய்ய வேண்டும். பொருளாதார கணக்கெடுப்பிற்கு தேவையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு எப்படியும் 5 மாதம் தேவைப்படும். அதன் பிறகு தான் பொருளாதார கணக்கெடுப்பு துவங்கும்.புதுச்சேரியில் முதல் பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1977ல் நடந்தது. கடந்த ஏழாவது கணக்கெடுப்பு 2019-20ம் ஆண்டு மொபைல் செயலி வழியாக பொது சேவை ஊழியர்களால் நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகள், அந்நிறுவனங்கள் செய்துள்ள முதலீடு உள்ளிட்டவை, கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டது. இருப்பினும் புதுச்சேரி ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.ஆனால் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பில் புதுச்சேரி அரசு அதிகாரிகளை கொண்டு எடுக்கப்பட்டது. 59,151 நிறுவனங்கள் இருப்பதாக பதிவானது.இதில் 17,759 நிறுவனங்கள் கிராம பகுதிகளிலும், 42,393 நிறுவனங்கள் நகர பகுதிகளிலும் இயங்குவதாக பதிவானது. மொத்தமுள்ள 59,152 நிறுவனங்களில் 88.41 சதவீதம் அதாவது 52,299 நிறுவனங்கள் வேளாண் சாரா நிறுவனங்களாகவும், மீதமுள்ள 11.59 சதவீதம் (6,853) வேளாண் சார்ந்த நிறுவனங்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசின், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, ஸ்கில் இந்தியா மற்றும் அனைவருக்கும் வீடு ஆகிய திட்டங்கள், இலக்கை அடைவதற்கான, முன்னுரிமை பொருளாதார திட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளன.இந்த திட்டங்களில் புதுச்சேரி குறிப்பிடத்தக்க இலக்கினை எட்டியுள்ளது. இந்த தரவுகள் அனைத்தையும் தொகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ