உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனமழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு : முதல்வர் ரங்கசாமி தகவல்

கனமழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு : முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: கனமழையால் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள் குறித்து துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கூறியதாவது: கடந்த 2 நாட்களில் புதுச்சேரியில் 21 செ.மீ., மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக, 1 மணி நேரத்தில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது.மழைநீரை விரைவாக வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தோம். இருப்பினும், மேட்டுப்பகுதியில் இருந்து மழைநீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனகன் ஏரியில் இருந்து வெளியேறும் அதிகப்படியான உபரிநீர், இந்திரா சதுக்கத்தில் தேங்குகிறது. அதை சரி செய்ய, அந்த பாதைகளில் குழாய் புதைக்க வேண்டிய வேலை உள்ளது. எல்லா பகுதியிலும் நீர் உறிஞ்சும் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. நகராட்சி, கொம்யூன், பொதுப்பணித் துறை ஊழியர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரைஅகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த முறை இதுபோன்ற பிரச்னை வராத அளவுக்கு பொதுப்பணித்துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாய பாதிப்பு குறித்து துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !