உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர் அதிகாரிகள் பார்வை

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர் அதிகாரிகள் பார்வை

திருக்கனுார் : கொடாத்துாரில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு கனமழை பெய்தது.இதனால், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, கொடாத்துார் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிடிருந்த 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் வேளாண் அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் ஊழியர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.வேளாண் களப்பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை உள்ளிட்ட ஊழியர்கள் உடனிருந்தனர். இதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !