உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு ரெட்டியார் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 71; கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.குடிப்பழக்கம் காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, தட்சிணாமூர்த்தி கோபித்து கொண்டு வெளியே சென்றுவிட்டு, சில நாட்கள் கழித்து வருவது வழக்கம்.கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, கோபித்து கொண்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ