உள்ளூர் செய்திகள்

 மூதாட்டி தற்கொலை

அரியாங்குப்பம்: மூதாட்டி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுார் சாலை, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராசு மனைவி பிருந்தாவதி, 74; இவர் நேற்று முன்தினம் தனது மகனுடன் பேசி விட்டு படுக்க சென்றார். காலையில் எழுந்து பார்க்கும் போது, அருகில் இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை