உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டி கண்கள் தானம்

மூதாட்டி கண்கள் தானம்

புதுச்சேரி : அரியாங்குப்பத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டது. அரியாங்குப்பம் தொகுதி ஆர்.கே. நகர் பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் குமாரி, 68. இவர், நேற்று முன்தினம் இறந்தார். அதையடுத்து அவர் கண்களை தானமாக வழங்க, அவரது சகோதரியின் மகன் அன்பு, பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை ஆலோசகர் கந்தசாமியை தொடர்பு கொண்டார். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஜித்தின் சுரேஷ் தலைமையில் செவிலியர்கள் கோபிகா, சுமித்ரா ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிவக்குமார் ஆகியோர், மறைந்த குமாரி வீட்டிற்கு வந்து, பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை ஒருங்கிணைப்பாளர் வடிவேலு தலைமையில் கண்களை தானமாக பெற்றனர். இது நான்கு நபர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ