உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு திட்டங்கள் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு திட்டங்கள் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

புதுச்சேரி : அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அரசின் அனைத்து நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது, அறிக்கை:

புதுச்சேரியில் 35 அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிடித்து வருகிறது. சில பள்ளிகள் தங்களின் சொந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.புதுச்சேரியில் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ஒதுக்கப்படும் 1,350 கோடி நிதியில், பள்ளிக்கல்விக்கு 950 கோடி நிதி செலவிடப்படுகிறது. பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை எவ்வித பாகுபாடு இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் உள்ள பல அரசு உதவி பெறும் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடம் கட்டாயமாக்கப்படாமல் உள்ளது. அரசின் உதவியை ஒரு நிர்வாகம் பெரும்போது அரசின் சட்ட திட்டங்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்பது நியாயம். மாறாக அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவது ஏற்புடையது அல்ல.அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் படிக்கின்றனர் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம், இலவச சைக்கிள், புத்தகப் பை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை