உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சமுதாய கூடங்களை தயார்படுத்த ஓம்சக்தி சேகர் கோரிக்கை 

 சமுதாய கூடங்களை தயார்படுத்த ஓம்சக்தி சேகர் கோரிக்கை 

புதுச்சேரி: பருவமழை துவங்கியுள்ளதால், சமுதாய கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வாய்க்கால் அடைப்புகளை சரி செய்ய கூடுதல் பொக்லைன் இயந்திரங்களை டிரைவர்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து சமுதாய கூடங்களையும் பொதுமக்கள் தங்கும் வகையில், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சமுதாய கூடங்களுக்கான பொறுப்பு மற்றும் சாவி பராமரிப்பு குறித்து தெளிவான உத்தரவு வழங்கிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி