உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிகள், பெண் பேலீசாருக்கு அடிப்படை வசதிகள் தேவை ஓம் சக்தி சேகர் வலியுறுத்தல்

மாணவிகள், பெண் பேலீசாருக்கு அடிப்படை வசதிகள் தேவை ஓம் சக்தி சேகர் வலியுறுத்தல்

புதுச்சேரி : சுதந்திர தின விழாவில் பங்கேற்க கடற்கரை சாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், சீருடை பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை சாலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதில், அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார வாகனங்கள், மாணவ, மாணவிகள் அணிவகுப்பு ஊர்வலம், காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அணி வகுப்பில் கலந்து கொள்பவர்கள் கடந்த ஒரு வார காலமாக கடற்கரை சாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையானஅடிப்படை வசதிகள் ஏதுவும் செய்து தரப்படவில்லை.குறிப்பாக, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவிகள், பெண் காவலர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, முதல்வர் ரங்கசாமி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் உட்பட அனைவருக்கும் தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். பயிற்சி முடியும் வரை அரசு கட்டண கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுதந்திர தினத்தன்று உடை மாற்றும் இடங்கள் உரிய பாதுகாப்புடன் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ