மீண்டும் மணல் கொள்ளை கட்டாந்தரையாகும் மலட்டாறு
நெட்டப்பாக்கம் மலட்டாற்றில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மணல் கொள்ளை நடக்கிறது. அதிகாரிகளும் கண்டுகொள்ளால் இருந்தனர். இந்நிலையில், கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றதும், அவரது அதிரடியால் கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் மணல் கொள்ளை அறங்கேறி வருகிறது.பண்டசோழநல்லூர், வடுக்குப்பம் பகுதியில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் கொள்ளை நடக்கிறது. காவல், வருவாய், பொதுப்பணித்துறை என தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவதில்லை. அதற்கேற்ப மணல் கொள்ளையர்களின் கவனிப்பும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மணல் கொள்ளையால் மலட்டாறு ஆற்றுப் படுகையில் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் மலட்டாறு கட்டாந்தரையாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனை தடுக்கும் வகையில் மலட்டாறு பகுதியில் பள்ளம் அல்லது படுகை அணை கட்டினால், மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.