உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொழிலாளர் துறையில் ஒருநாள் பயிற்சி முகாம்

 தொழிலாளர் துறையில் ஒருநாள் பயிற்சி முகாம்

புதுச்சேரி: தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் இணக்க அதிகாரி அலுவலகம் சார்பில், தொழில் நல்லுறவு மற்றும் நான்கு புதிய சட்டத் தொகுப்புகள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. காந்தி நகரில் உள்ள தொழிலாளர் வளாக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துறை செயலர் ஸ்மிதா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இதில் துணை ஆணையர் சந்திரகுமரன் வரவேற்றார். தொழிலாளர் சட்ட வல்லுநர்கள் முகுந்தன், பாலாஜி, தொழிற்சாலை ஆய்வாளர் ஞானவேலு மற்றும் கொதிகலன் ஆய்வாளர் முரளி, ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முகாமில் புதுச்சேரியை சேர்ந்த 16 சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளைச் சேர்ந்த நிர்வாக பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிலாளர் இணக்க அதிகாரி கஸ்துாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை