உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குதிரை மீது பைக் மோதல் ஓ.என்.ஜி.சி., ஊழியர் பலி

குதிரை மீது பைக் மோதல் ஓ.என்.ஜி.சி., ஊழியர் பலி

காரைக்கால்: காரைக்காலில் குதிரை மீது பைக் மோதி ஓ.என்.ஜி.சி., ஊழியர் இறந்தார். காரைக்கால், அண்ணா நகர், ஜீவன் பீமா நகரை சேர்ந்தவர் சுந்தர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திர வைத்தி, 38. உத்தரபிரதேசம், ஜான்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் யாதவ், 35. இவர்கள் மயிலாடுதுறை குத்தாலம் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர். கடந்த 29ம் தேதி ராஜேஷ் யாதவ் மற்றும் மகேந்திர வைட்டி ஆகியோர் பைக்கில் காரைக்காலுக்கு வந்துவிட்டு, பின், நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தனர். நெடுங்காடு அன்னவாசல் மெயின்ரோட்டில் சென்றபோது திடீரென குறுக்கே ஓடி வந்த குதிரையின் மீது பைக் மோதியது. இதில் பைக் ஓட்டிய ராஜேஷ் யாதவ், மகேந்திரா வைத்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் குதிரை சம்பவ இடத்திலேயே இறந்தது. மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் யாதவ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை