மேலும் செய்திகள்
தேசிய கல்வி மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம்
22-Nov-2024
புதுச்சேரி : பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் இ - கார்னரை துணை வேந்தர் தரணிக்கரசு திறந்து வைத்தார்.புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான டிஜிட்டல் வங்கி வசதிகளை மேம்படுத்தவும், தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய இ - கார்னர் நிறுவப்பட்டுள்ளது.இதனை பல்கலைக் கழக துணை வேந்தர் தரணிக்கரசுநேற்று திறந்து வைத்தார். இதில், சி.சி.ஆர்., இயக்குனர் கிளிமென்ட் எஸ் லுார்து, பதிவாளர் ராஜ்னேஷ் புடானி, நுாலகர் மற்றும் துணை பொதுக் மேலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இ-கார்னர் மூலம் கணக்கு மேலாண்மை, பண வைப்பு, மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற பல வங்கிச் சேவைகளை பெறலாம். மேலும், வளாகத்தில் உள்ள அனைவரும் வங்கிச் சேவைகளை எளிதாக பெற முடியும்.
22-Nov-2024