உழவர்கரை நகராட்சியில் பழைய பொருட்கள் வாங்கும் மையங்கள் திறப்பு
புதுச்சேரி: இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் நகர்ப்புற துாய்மை இந்தியா இயக்கம் கீழ் வரும் தீபாவளி பண்டிகையை துாய்மையான, பசுமை தீபாவளி ஆக வரும் 3ம் தேதி வரை கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, தீபாவளி போது தெருக்கள், சந்தைகள் மற்றும் சுற்றுப் புறங்கள் துாய்மையாக இருப்பதை உறுதி செய்ய அனைத்து சமூகமும் ஒன்றிணைய வேண்டும். எனவே, தர்னார்வலர்களை கொண்டு பொது இடங்களை சுத்தம் செய்தல், தீபாவளிக்கு முன்னும், பின்னும் துாய்மைக்கு முன்னுரிமை அளிப்பது, மறு சுழற்சி மற்றும் மறு உபயோகத்திற்கான பழைய பொருட்கள் வாங்கும் மையங்களை திறக்கப்பட்டுள்ளது.இதன்படி வீடுகள், வியாபார நிறுவனங்களில் பழைய பொருட்கள் வாங்கும் மையங்களாக உழவர்கரை நகராட்சி அலுவலக வளாகம், மேரி உழவர்கரை உதவி பொறியாளர் அலுவலகம், இ.சி.ஆர் நவீன சுகாதார மீன் அங்காடி, வெங்கட்டா நகர் சிறுவர் பூங்கா, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்கா, கலை அரங்கம் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, அனைத்து நாட்களிலும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, பொதுமக்கள் தங்களது பழைய பொருட்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.