உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை, காமராஜர் வீதியில், பொதுப்பணித்துறை, பொது சுகாதார குடிநீர் வழங்கல் பிரிவு மூலம் ரூ. 14 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமை தாங்கி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். தலைமை பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதார செயற்பொறியாளர் வாசு, குடிநீர் வழங்கல் பிரிவு உதவி பொறியாளர் அன்பரசன், இளநிலை பொறியாளர் வெங்கடேசன், ஆய்வாளர் கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் கோவிந்த சாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, ஒத்தவாடை வீதி, புதுத்தெரு, அந்தோணியார் கோவில் தெரு, திருவள்ளுவர் வீதி, பாரதிதாசன் வீதி, பாரதிபுரம் மெயின் ரோடு, கல்வே பங்களா, நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை