உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு

வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு

வானுார் : புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து 600 மீட்டர் தொலைவில் 'லீ பாரடைஸ் டி ஆரோ' வனவிலங்கு கல்வி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில், ஆரோவில் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.ஆரோவில்லைச் சேர்ந்த கீதா செல்வம், சக்கரபாணி, அருண்செல்வம் ஆகியோர், பூங்கா ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இங்கு 25 பசுமாடுகள், கன்று குட்டிகள், முயல்கள், வாத்துகள், மீன்கள் மற்றும் பஜ்ஜிஸ், ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ், காக் டைல்ஸ் உள்ளிட்ட 6 வகையான 210 வெளிநாட்டு கிளிகள் இருப்பிடமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வனவிலங்கு கல்வி பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் ஆரோவில் அறக்கட்டளை இயக்குனர் சொர்ணாம்பிகா திறந்து வைத்து பேசினார். பூங்காவை பார்வையிட ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம். தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை