உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தமிழிசை நின்றால் டிபாசிட் காலி எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆவேசம்

புதுச்சேரியில் தமிழிசை நின்றால் டிபாசிட் காலி எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆவேசம்

புதுச்சேரி : 'வரும் லோக்சபா தேர்தலில், புதுச்சேரி தொகுதியில் தமிழிசை போட்டியிட்டால், 'டிபாசிட்'வாங்க மாட்டார்' என, எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசினார்.புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:மத்திய பா.ஜ., அரசு, புதுச்சேரி மாநிலத்திற்கு கடந்த மூன்றாண்டு காலத்தில், எந்த நன்மையும்செய்யவில்லை.மூடிய பஞ்சாலைகளை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எதைப்பற்றியும் கவலையில்லாத முதல்வராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மக்களைப்பற்றி, தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாமல், 19 அரசு நிறுவனங்களை,ஒழித்த பெருமை ரங்கசாமியையே சாரும்.புதுச்சேரிக்கு கவர்னர் தமிழிசை வந்த உடன், ஒரு ஆட்சியை கலைத்த பெருமைக்குரியவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கி இந்த மூன்று ஆண்டுகளில் பல சவால்களை மக்களிடம் அளித்தார்.அவரைபதவியை துறந்து வாருங்கள் அரசியல் செய்வோம் என்று நாங்கள் சவால் விட்டோம். இன்று ராஜினாமா செய்திருக்கிறார். அவர் புதுச்சேரியில் நிற்க வேண்டும். மக்கள் தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.ஏற்கனவே டிபாசிட் வாங்காத தமிழிசையை புதுச்சேரி மக்கள் விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டது.புதுச்சேரியில் தாமரை மலர்ந்துவிட்டதாக கூறும் பா.ஜ., வினர் தேர்தலில் நிற்க ஆளில்லாமல் பிராந்தியம், பிராந்தியமாக தேடும் அவல நிலையில் உள்ளனர்.புதுச்சேரியை சின்னாபின்னமாக்கிய பா.ஜ.,-என்.ஆர். காங்., கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகி விட்டனர்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ