மேலும் செய்திகள்
தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகை
18-Oct-2024
புதுச்சேரி: வவுச்சர் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர், முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா நன்றி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால், முதல்வர் அறிவித்தும் அதற்கான அரசாணை வெளியிடாததால், மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகினர்.கடந்த ஒரு வாரமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல்வரை சந்தித்து அவர்களுக்கு உயர்த்தி அறிவித்த ஊதியத்தை அரசாணையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.அதனைத் தொடர்ந்து, வவுச்சர் ஊழியர்களின் மாத சம்பளத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்தும் நிதித்துறை அனுப்பிய கோப்பிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், வவுச்சர் ஊழியர்கள் 1,378 பேர் வரும் நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் பெற உள்ளது. எங்களது கோரிக்கை ஏற்று, வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க நடவடிக்கை எடுத்த கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும், தி.மு.க., சார்பில் நன்றி. இதேபோல் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
18-Oct-2024