உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்ப்பை நழுவவிட்டு குறட்டை விட்ட எதிர்க்கட்சிகள்

வாய்ப்பை நழுவவிட்டு குறட்டை விட்ட எதிர்க்கட்சிகள்

கவர்னருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திட ரங்கசாமி முடிவு செய்தார். அவரை சமாதானம் செய்ய டில்லி மேலிடம் முக்கியஸ்தர்களை அனுப்பும் என எதிர்பார்த்த நிலையில், எப்பொழுதும் வந்து செல்லும், நிர்மல் குமார் சுரனாவே பேச்சுவார்த்தைக்கு வந்தது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இவ்வளவு காளோபரம் புதுச்சேரி அரசியலில் நிகழ்ந்த சூழ்நிலையில், இதனை தங்கள் கட்சிக்கு சாதகமாக அரசியல் 'லாபி' செய்திருக்க வேண்டிய தி.மு.க., மற்றும் காங்., தலைவர்கள் மவுனம் காத்தனர். மாஜிமுதல்வர் நாராயணசாமி பேட்டி கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். குறைந்தபட்சம் பிரச்னையில் சிக்கியிருந்த ரங்கசாமியை காங். தலைவரான வைத்திலிங்கம் அல்லது தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா சந்தித்திருந்தால் அரசியல் சூழ்நிலையே அடியோடு மாறி இருக்கும்.ஆனால் இரு கட்சி தலைவர்களும் அரசியல் களத்தில் எவ்வித 'லாபி'யும் செய்யாமல் குறட்டை விட்டு தூங்கி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !