உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய் சுகாதார விழிப்புணர்வு

வாய் சுகாதார விழிப்புணர்வு

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளியில், சுகாதாரத் துறையின் நடமாடும் பல் மருத்துவ பிரிவு சார்பில், மாணவர்களுக்கான 'வாய் சுகாதார விழிப்புணர்வு' நிகழ்ச்சி நடந்தது. பல் மருத்துவர் சுகந்தி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாய் சுத்தம் மற்றும் பற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பற்களை சரியான முறையில் தேய்ப்பது, பல் நோய்கள் ஏற்பட காரணமான பழக்க வழக்கங்கள், அவற்றைத் தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பல் பிரச்னை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை