திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்ய ஆணை வழங்கல்
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்வதற்கான பணி ஆணையை முதல்வர் வழங்கினார். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட உள்ளது. இதற்காக அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு ரூ.2.64 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து,ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில், 10க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் கலந்து கொண்டனர். அதில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் வரதராஜனுக்கு, புதிய தேர் செய்வதற்கான பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வழங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் செல்வராசு, தொழில் நுட்ப வல்லுநர் குழுவினர், கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் புதிய தேர் திருப்பணிக் குழுவினர் உடனிருந்தனர்.