உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்

இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்

வில்லியனுார் : புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வில்லியனுார் ஆத்மா பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் இயற்கை விவசாயத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்த பயிற்சி முகாம் திருக்காஞ்சியில் நடந்தது.ஆத்மா திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். ஆத்மா துணை திட்ட இயக்குனர் கலைச்செல்வி மற்றும் காரைக்கால் பஜன்கோ உழவியல் துறை பேராசிரியர் மோகன், இயற்கை விவசாயத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்து பேசினர். துணை வேளாண் இயக்குனர் அமர்ஜோதி, வேளாண் அலுவலர்கள் தினகரன், சத்தியன் மற்றும் வில்லியனுார், திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் அரியூர் உழவர் உதவியகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வம், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் மற்றும் கலப்பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை