அடுத்ததும் நம்ம ஆட்சி தான் சாய் சரவணன் குமாா் பேச்சு
புதுச்சேரி: சட்டசபையில் சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது: மக்களால் ,மக்களை கொண்டு ஆட்சி இருந்தால் அது மக்களாட்சியாக இருக்க முடியும். அப்படி பிரதமர் மோடி ஆசியுடன் புதுச்சேரியில் அமைந்த பா.ஜ., - என்.ஆர்.காங்., அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. இது வளர்ச்சிக்கான அரசு. முதல்வர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி சிக்ஸர் அடித்துள்ளார். எது போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறார். அடுத்து வருவதும் நம்முடைய ஆட்சி தான்.