நமது பள்ளி நமது பெருமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருபுவனை: புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்கள் 'நமது பள்ளி நமது பெருமை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை லட்சுமிகாந்தம் தலைமை தாங்கினார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாட்சா நோக்க உரையாற்றினார். ஆசிரியை ரேவதி உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள்-ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் பச்சையப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.