மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது
07-Nov-2024
புதுச்சேரி : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை, அதிரடிப்படை போலீசார் வேனுடன் பிடித்து, வில்லியனுார் போலீசில் ஒப்படைத்த நிலையில், ஒருவர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருக்கனுார், வில்லியனுார், பாகூர் பகுதியில் சங்கராபரணி மற்றும் தென்பெண்ணையாறுகளின் கரையோரத்தில் திருட்டு மணல் அள்ளி விற்பதாக புகார் நிலவியது.அமைச்சரின் ஆசி பெற்ற 2 இன்ஸ்பெக்டர் கள், மணல் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற சீனியர் எஸ்.பி., கலைவாணன் கவனத்திற்கு, மணல் திருட்டு புகார் சென்றது. அவரது உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு பிள்ளையார்குப்பம் பகுதியில் திடீர் சோதனையில் இறங்கினர்.அப்போது, பிள்ளையார்குப்பம் கோவில் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 4 பேரையும், போலிரோ வேனுடன் பிடித்து வில்லியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.ஆனால், அகரம் முத்துமாரியம்மன் கோவில் பிரகாஷ், 40; என்பவர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மற்ற மூவரையும் விடுவித்தனர். சீனியர் எஸ்.பி., உத்தரவின் பேரில் பிடிபட்ட 4 பேரில் மூவரை விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
07-Nov-2024