கைவினை கலைஞர்களுக்கான பேக்கேஜிங் பயிற்சி பட்டறை
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில், கைவினை கலைஞர்களுக்கான பேக்கேஜிங் பயிற்சி பட்டறை நடந்தது. இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், பிப்டிக் நிறுவனம் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், நடந்த பயிற்சிக்கு, மூத்த திட்ட அலுவலர் தினேஷ் பாபு வரவேற்றார். பேராசிரியர் சமித்குமார் பயிற்சியாளர்களை அறிமுகப்படுத்தினார். இதில், சென்னை, ஹனிகோர் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த மார்டின், நவீன பேக்கேஜிங் முறைகள், பொருட்கள் தேர்வு மற்றும் வடிவமைப்பு குறித்து விளக்கினார். புதுச்சேரி, ட்ரூ கார்டன்ஸ் நிறுவன ஹர்ஷ்வர்தன், குறைந்த செலவில் தரமான கார்டன் பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் சந்தை தேவைகள் குறித்து விளக்கினார். முதன்மை கைவினை கலைஞர் லயன் ஆர் மோகந்தாஸ், பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு ஏற்ற பேக்கேஜிங் அமைப்பு, பாதுகாப்பு முறைகள் மற்றும் காட்சியமைப்பு குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். திட்ட அலுவலர் விக்னேஷ் தனச்செல்வன் நன்றி கூறினார்.