உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

புதுச்சேரி: மின்சாரம் தாக்கி, பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.புதுச்சேரி, பூமியான்பேட், பாவாணர் நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 49; பெயிண்டர். இவர் கடந்த 22ம் தேதி காலை நல்லவாட்டில் உள்ள ஒருவரது வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, அலெக்சாண்டர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை