மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த நபர் சாவு
06-Nov-2026
புதுச்சேரி: வீட்டில் பெயின்ட் அடிக்கும் போது தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார். வில்லியனுார், சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்தவர் மியான்ஜான், 53; பெயிண்டர். இவர், கடந்த 12ம் தேதி மாலை அதேப் பகுதி, பழைய மேட்டுத் தெரு பகுதியில் வசிக்கும் கஜா மொய்தீன் என்பவரது வீட்டில் பெயிண்டிங் வேலை செய்தபோது, வீட்டின் 10 அடி உயரத்தில் இருந்து தவறி மியான்ஜான் கீழே விழுந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து புகாரின் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Nov-2026