மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல்: சமையலர் பலி
06-Apr-2025
பாகூர்:பைக் மீது லாரி மோதி, பெயிண்டர் இறந்தார்.அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் அரிபுத்திரி, 56; பெயிண்டர். நேற்று சொந்த வேலையாக வெளியே சென்ற இவர், மதியம் 1:00 மணியளவில், வீட்டிற்கு செல்வதற்காக, நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே பைக்கில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற லாரி, பைக் மீது மோதியது.லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கிய அவரை, பொது மக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
06-Apr-2025