மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
28-Aug-2024
புதுச்சேரி: புதுச்சேரி சிவ வள்ளி விலாஸ் ஜூவல்லர்சில் நடந்த மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாக இயக்குனர் சிவசங்கர் பரிசுகள் வழங்கினார்.புதுச்சேரி நேரு வீதியில் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சிவ வள்ளி விலாஸ் ஜூவல்லர்ஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. இப்போட்டியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டப் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சிவ வள்ளி விலாஸ் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவசங்கர் பரிசுகள் வழங்கினார். முதல் பரிசாக 3,000, இரண்டாம் பரிசாக 2,000, மூன்றாம் பரிசாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.
28-Aug-2024