உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகிஸ்தான் பெண் வெளியேற நோட்டீஸ்

பாகிஸ்தான் பெண் வெளியேற நோட்டீஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் திருமணம் செய்து வசிக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணை வெளியேற கூறி, வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஹனிப்கான், 39. இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹானில்கான், 42, என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து, லாஸ்பேட்டையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அண்மையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 26 பேரை படுகொலை செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.இதற்கிடையே ஹானிப்கான், தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை புதுப்பிக்காமல் உள்ளார். இதையடுத்து புதுச்சேரி வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் நேற்று லாஸ்பேட்டையில் ஹனிப்கான் வீட்டிற்கு சென்று, புதுச்சேரியில் இருந்து வெளியேறுமாறு கூறி, நோட்டீஸ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை