உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் பனை மரங்கள் எரிந்து சாம்பல்

கடற்கரையில் பனை மரங்கள் எரிந்து சாம்பல்

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே பனை மரங்களுக்கு தீ வைத்தது யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம், கடற்கரை பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம், புகுக்குப்பம் கடற்கரை பகுதியில் இருந்த பனை மரங்கள் தீப்பிடித்து எரிவதாக, தீயணைப்பு படையினருக்கு தகவல் வந்தது.அதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயில் எரிந்த பனை மரங்களை, அணைத்தனர். இதில், 10 மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் மரங்களுக்கு தீ வைத்தது யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ