உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா நகர் இடைத்தேர்தல்: 70 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்திரா நகர் இடைத்தேர்தல்: 70 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி இதுவரை 70 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறினார்.இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திரா நகர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணித்து வருகிறோம். இதுவரை 70 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 5 எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி, எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்தல் பிரசாரம் செய்தால், போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். இத்தொகுதியில் இரண்டு ஓட்டுச் சாவடிகள் பதட்டம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு துணை ராணுவம் தேவையா என்பது குறித்து, மனு தாக்கல் முடிந்த பிறகு தீர்மானிக்கப்படும். லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.இவ்வாறு சீனியர் எஸ்.பி., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ