மேலும் செய்திகள்
சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
09-Apr-2025
வில்லியனுார்: வில்லியனுார் வள்ளிதேவ சேனா சிவசுப்ரமணிய கோவிலில் இன்று காலை பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது.வில்லியனுார் சுந்தரமூர்த்தி வினாயகபுரம் மேற்கே உள்ள வள்ளிதேவ சேனா சிவசுப்ரமணிய கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 2ம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி காலை சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது.நேற்று திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து காலை சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.இன்று காலை 8:30 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் உற்சவதார்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
09-Apr-2025