பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். வழக்கறிஞர்கள் கார்த்திக், பத்மநாபன், சக்தி ஆகியோர் கலந்து கொண்டு, சட்ட விழிப்புணர்வு, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர். நெல்லித்தோப்பு அரசு தபால் துறை உதவியாளர் டெல்னா, ரம்யா ஆகியோர் சிறுசேமிப்பின் வழிமுறைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். பின், பெற்றோர்களுக்கு தொடர் வைப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.