உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நோ பார்க்கிங் பகுதியில்வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு

 நோ பார்க்கிங் பகுதியில்வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை அருகே, விதிமுறைகளை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்ஏற்படுகிறது. புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு, புதுச்சேரி மட்டுமின்றி அண்டை மாநிலமான கடலுார் , விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் முக்கிய பாதையில் போக்குவரத்து போலீசாரால் வாகனங்கள் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை மீறி சில வாகன ஓட்டிகள், தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைச் சாலையிலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் சாலை குறுகலாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் ஆம்புலன்ஸ்கள், இந்த ஆக்கிரமிப்பு வாகனங்களால் உள்ளே நுழைய முடியாமல் சைரன் ஒலியுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களைத் அப்புறப்படுத்தவேண்டிய போலீசார் , சில நேரங்களில் பெயரளவிற்கே நடவடிக்கை எடுக்கின்றனர். பகல் நேரங்களில் போக்குவரத்து போலீசார் இங்கே நிரந்தரமாக நின்றால் மட்டுமே இந்த விதிமீறலைத் தடுக்க முடியும், என்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளை மேம்படுத்தும் அரசு, இது போன்ற முக்கிய மருத்துவமனைப் பகுதிகளில் போக்குவரத்து ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும். விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களை உடனுக்குடன் பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி